Skip to main content

ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்து இருபது ஆயிரம் திருட்டு! 

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

Twenty thousand stolen by changing the ATM card!

 

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தியாகராஜன்(40). இவர், கொளக்காநத்தம். கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஏடிஎம் மையத்திற்கு தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு சென்றுள்ளார். தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை பார்க்கத் அவருக்கு தெரியாததால் வெளியே நின்று கொண்டிருந்த வாலிபர்களை உதவிக்கு அழைத்துள்ளார். மேலும், தியாகராஜன் தனது ஏடிஎம் கார்டை அவர்களிடம் கொடுத்து தன் கணக்கில் பணம் இருப்பு விவரத்தை பார்த்து சொல்லுமாறு கூறியுள்ளார். 

 

அவர்களும், அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அவர் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அவரிடம் கூறியுள்ளனர். அப்போது அவரது ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுக்கும் போது அவரது கார்டை கொடுக்காமல் போலி ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளனர். அவர் அந்த இடத்தை விட்டு அகன்ற பிறகு தியாகராஜனின் ஒரிஜினல் கார்டை பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரு. 20 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். சிறிது தூரம் சென்ற தியாகராஜன் தனது ஏடிஎம் கார்டை பார்த்தபோது அது மாறி உள்ளது தெரியவந்தது. உடனே மையத்தின் அருகில் வந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து ஏடிஎம் மையம் முன்பு நின்றிருந்த மூவரையும் சுற்றி வளைத்தனர். அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவர் பிடிப்பட்டனர். அவர்களை பொதுமக்கள் அடித்து, மருவத்தூர் காவல்துறைக்கு தகவல் அளித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். 

 

போலீஸ் விசாரணையில் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்(22), அவரது அண்ணன் பிரசாத்(22) மற்றும் நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியை சேர்ந்த 26 வயது கபில் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் சரத்குமார் தப்பி ஓடி விட்டார். மற்ற இருவர் மீதும் தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரசாத், கபில் இருவரும் கோயம்புத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்