Advertisment

போஸ்டர் ஒட்டுவதில் அடிதடி; தாக்கி கொலை மிரட்டல் விட்ட தவெகவினர் தலைமறைவு

 tvk who threatened to attack and kill them went into hiding

Advertisment

போஸ்டர் ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் கட்சியினரும் தவெக கட்சியினரும் மோதிக்கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலம் பூமியன்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சிவபெருமான். இவருடைய மகன்களான சிவப்பிரகாசம், சூரியமூர்த்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகளாக இருந்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டிஎன்பவர் நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அருண்பாண்டி தரப்பு சார்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் போஸ்டர் ஒன்றை ஒட்டி இருந்தனர்.

அந்த போஸ்டர் மீது காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்க இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள்தரப்பில் மீண்டும்போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் மீது திட்டமிட்டே ஓட்டப்பட்டதாக ஆத்திரமடைந்த அருண்பாண்டி அவருடைய ஆதரவாளர்களுடன் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகியின் வீட்டிற்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

மேலும் அங்கு அவர்கள் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் கொடியைக் கீழே தூக்கிப் போட்டு சேதப்படுத்தினர். இந்த தாக்குதல் தொடர்பான சம்பவங்கள் வீட்டிலிருந்தசிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தவெகவினர் தாக்கியதோடு கொலை மிரட்டல் விட்டனர். இதில் பலத்த காயமடைந்த சிவப்பிரகாசத்தின் தந்தை சிவபெருமான் மற்றும் அவருடைய தம்பி சூரியமூர்த்தி ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள தாக்குதலில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகளை தேடி வருகின்றனர்.

Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe