Advertisment

மாநாட்டைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த திட்டம்

Vijay's tour after the conference

Advertisment

தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார்என்பது குறித்து பேசி இருந்தார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என மண்டலம்வாரியாக பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை திட்டமிட்டுள்ள விஜய், மாநாட்டிற்காகசிறப்பாக பணிகளை ஏற்று முடித்துக் காட்டியவர்களுக்கு கட்சியில் பதவி தரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மண்டல வாரியாக நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் சுற்றுப்பயணத்தின் போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர விரும்பும் மாற்றுக் கட்சி நிர்வாகிகளை கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட இருப்பதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளது.

politics
இதையும் படியுங்கள்
Subscribe