
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. அண்மையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட பலருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டது.
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. தவெகவில் இடம்பெற்றுள்ள அணிகளை பொறுத்தவரை மூன்றாம் பாலினத்தவர்கள் அணி, காலநிலை மாற்றம் அணி, தகவல் சரிபார்ப்பு அணி, வழக்கறிஞர் அணி, பரப்புரை அணி, தகவல் தொழில்நுட்ப அணி என மொத்தம் 28 அணிகள் இடம்பெற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)