TVK Struggle against the Waqf Board Amendment Bill

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நேற்று முன்தினம்(02-04-25) நாடாளுமன்ற மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்தார். இந்த விவாதத்திற்கு, திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணிகளான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும், இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா, திமுக எம்.பி ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் அனல் பறக்க பேசினர்.

Advertisment

12 மணி நேரத் தொடர் விவாதத்திற்கு பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், வக்ஃப் வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் பெரும்பான்மை வாக்கு கிடைத்ததால் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

Advertisment

TVK Struggle against the Waqf Board Amendment Bill

இந்நிலையில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்தங்களில் இஸ்லாமியர்கள் பாதிக்கும் வகையிலும் அவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் இருப்பதாகவும் கூறி இதனைக் கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு சேர்ந்த நபர்கள் பங்கேற்று வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி கண்டனம் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment