tvk said Alliance only with parties that accept Vijay  leadership

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. அண்மையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட பலருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டது.

Advertisment

இதனிடையே அடுத்தாண்டு தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளில் மாற்றமில்லை என்று அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வகையில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் தற்போதில் இருந்தே காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் இதுவரை 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும், விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.