இந்த ஆண்டு நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டர். மேலும் நீட் தேர்வை இரத்துசெய்ய வேண்டுமென தமிழக எதிர்கட்சியான திமுக, கூட்டணி கட்சிகள், திரைத்துறையினர் மற்றும் பல அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தும் நீட் எதிர்ப்பு கருத்துகளும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், ‘தமிழக மாணவர்கள் மீது நீட் தேர்வு என்னும் சமூக அநீதியைத் திணித்து தற்கொலைக்கு தூண்டும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று (14-09-2020) காலை தமிழக சட்டமன்றமுற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. சிந்தாதிரி பேட்டை பாலம் அருகில் உள்ள ரவுண்டானாவிலிருந்து ஊர்வலமாக சென்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட்டனர்.