“பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம்” - த.வெ.க தலைவர் விஜய்

Tvk leader vijay thanks to birthday wishes

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யின் 51 வது பிறந்தநாள் நேற்று (22-06-25) அவருடைய கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்தநாளுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமகவின் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பான தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

actor vijay birthday tvk vijay
இதையும் படியுங்கள்
Subscribe