Advertisment

“ஊழலே செய்யாதவர்கள் யாரென்று பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்” - த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு!

Tvk Leader Vijay says We should select those who have not committed corruption

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் பாராட்டி நிதியுதவி அளித்து வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 முறை மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இத்தகைய சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. இதனையடுத்து இந்த ஆண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து கல்வி விருது வழங்கி வருகிறார்.

Advertisment

அதன்படி முதற்கட்டமாக 80 தொகுதிகளைச் சேர்ந்த முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (30.05.2025) சந்தித்துப் பாராட்டி வாத்துகளை தெரிவித்து வருகிறார். முன்னதாக விஜய் பேசுகையில், “மை டியர் யங் லீடர்ஸ், அண்ட் பேரண்ட்ஸ், என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் எல்லாருக்கும் என்னுடைய வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள். உங்கள் எல்லாரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய சாதனைக்கு வாழ்த்துகள். படிப்பில் சாதிக்க வேண்டும் தான். படிப்பும் சாதனை தான். அதை நான் மறுக்கவில்லை. அதற்காகக் குறிப்பிட்ட ஒரே ஒரு படிப்பிற்கு மட்டும் சாதனை செய்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறது ஒன்றும் சாதனை கிடையாது.

Advertisment

ஒரே விஷயத்தைப் பத்தி திரும்பத் திரும்ப யோசித்து யோசித்து உங்கள் அன்சைட்டி ஏத்திக்காதீங்க. இவ்வளவு மன அழுத்தம் வேண்டிய அவசியம் எல்லாம் ஒன்றுமே கிடையாது. இது நான் ஏன் சொல்றேன்னா நீட் மட்டும் தான் உலகமா?. நீட் தேர்வையும் தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரியது. அதில் நீங்கச் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. அதனால் இப்போதே உங்கள் மனதை ரொம்ப தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். மனதை ஜனநாயக சிந்தனையோடு வைத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். ஏன்னெற்றால் ஜனநாயம் என ஒன்று இருந்தால் தான் இந்த உலகமும் சரி, சரி இந்த உலகத்தில் இருக்கிற எல்லா பீல்டும் சரி ஒரு சுதந்திரமாக இருக்க முடியும். அதுமட்டுமில்லை. ஒரு முறையான ஒரு ஜனநாயம் இருந்தாலே போதும். எல்லாருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைக்கும். அதனுடைய முதல் படியாக உங்கள் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லுங்கள். அவர்களுடைய ஜனநாயக கடமையை ஒழுங்காகச் செய்யச் சொல்லுங்கள்.

ஜனநாயக கடமையைச் சரியா செய்கிறது என்பது ஒன்றும் பெரிய விஷயம் எல்லாம் கிடையாது. சாதாரணமான விஷயம் தான். நல்லவர்கள் நம்பிக்கையான வங்க, இதுவரைக்கும் ஊழலே செய்யாதவர்கள் யாரென்று பார்த்துத் தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும் அவ்வளவுதான். இந்த கடமையை நான் 2 ஆண்டுகளுக்கு முன்பே இதே மாணவர்களுக்கான நிகழ்வில் நான் சொல்லி இருந்தேன். காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிச்சிடலாம்னு நினைக்கிறார்கள் இல்லையா அவர்களையும், அந்த கலாச்சாரத்தையும் வந்து யாரும் உற்சாகப்படுத்தாதீர்கள். யாரும் காசு வாங்காதீர்கள் உங்கள் பெற்றோரிடமும் இது குறித்து எடுத்து சொல்லுங்கன்னு நான் சொல்லிருந்தேன் அதை அப்படியே கடைப்பிடியுங்கள்” எனப் பேசினார்.

10th student 12th std Assembly Election 2026 examination Public exams Tamilaga Vettri Kazhagam tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe