திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி போராளியுமான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று(17.09.2025) கொண்டாடப்படுகிறது. இந்நாளை சமூகநீதி நாளாக தமிழக அரசு கொண்டாடுகிறது.
இந்த நிலையில் 147வது பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அவரை போற்றும் வகையில் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய் அவரது கட்சி தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை, சமூக சீர்திருத்தக்கொள்கை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்த எம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.