விவசாயிகளுக்கு விருந்து அளிக்கும் த.வெ.க. தலைவர் விஜய்!

tvk Leader Vijay feast for the farmers

தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை பா.ஜ.க. என்ற வகையிலும், அரசியல் எதிரி தி.மு.க. என்ற வகையிலும் பேசி இருந்தார். மேலும், விஜய் தன்னுடைய உரையில் திராவிடமும், தமிழ்த் தேசியமும் இரு கண்கள் என்று கூறியிருந்தார். மேலும் இந்த மாநாட்டில் பேசும் போது பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் தான் த.வெ.க. மாநாடு நடத்த நிலம் வழங்கிய விக்கிரவாண்டி வி.சாலை விவசாயிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று (23.11.2024) விருந்தளிக்க உள்ளார். இதற்காக சுமார் 300 விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்காக சுமார் 300 பேருக்கு சைவ விருந்துகள் தயாராகி வருகிறது. இதனையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் வருகை தந்து விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து விருந்து அளிக்க உள்ளார்.

Farmers tvk Vikravandi
இதையும் படியுங்கள்
Subscribe