/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps-cake-art-1.jpg)
எடப்பாடி பழனிச்சாமிக்கு த.வெ.க. தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 70 ஆவது பிறந்த நாளை சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனூர் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தொண்டர்களுடன் 70 கிலோ அளவிலான பிரமாண்ட கேக்கை வெட்டி கொண்டாடினார். இதனையொட்டி எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் கட்சியினர், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் எக்ஸ் சமூக வலை தளத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us