TV for Govt Primary School Smart Class Parents provided!

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு அப்பள்ளியில் படிக்கும் மாணவியின் பெற்றோர் ஒருவர் ஸ்மார் வகுப்புக்காக டி.வி ஒன்று வாங்கி கொடுத்திருப்பது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கொடைரோடு பகுதியில் மெடிக்கல் நடத்தி வரும் சுபாஷ் சந்திர போஸ், தன் மகள் யோகஸ்ரீயை தமிழ் வழி கல்வியில் படிக்க வேண்டும் என்பதற்காக அம்மைய நாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்தார். இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் எடுப்பதற்கான டிவி உபகரணங்களை சுபாஷ் சந்திர போஸ் பள்ளிக்கு வழங்கினார். இதனை பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர். பள்ளிகல்விதுறையில் தமிழக முதல்வர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் நடவடிக்கைகள் தன்னைப் போன்றவர்களை அரசு பள்ளிகளுக்கு தேடி வர செய்ததாகவும் இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisment