தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்ஷி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை இதுவரை எத்தனை பார்வையாளர்களை கடந்துள்ளது என்று கணக்கிட்டுள்ளனர். பிக் பாஸ் முதலாம் சீசன் முழுவதுமாக சேர்த்து 50 இலட்சம் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர்.

Advertisment

bigboss

Advertisment

அதே போல் இரண்டாம் சீசன் முழுவதும் சேர்த்தால் 30இலட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக கூறுகின்றனர், இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் மூன்றாம் சீசன் 50 நாட்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் நாட்கள் உள்ள நிலையில் மூன்றாம் சீசனை இதுவரை 50இலட்சம் பேர் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் இரண்டு சீசன்களில் இல்லாதளவுக்கு இந்த சீசனுக்கு அதிக பார்வையாளர்கள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த நேரங்களில் மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு புறம் எதிர்ப்பு இருந்தாலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.