Advertisment

ஆண்ட்ராய்ட்டு போன் ஆபத்திலிருந்து மாணவர்களை காக்க சதுரங்க போட்டி! 

sa

இன்றைய இளம் சிறார்கள் ஆண்ட்ராய்டு செல்போன், தொலைக்காட்சி விளையாட்டுகள், தொடர்களில் மூழ்குவதால் மூளை மழுங்கடிப்பதுடன், இளம் வயதிலேயே பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். அவர்களின் சிந்தனைகளை வளப்படுத்தும் நோக்கில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது.

Advertisment

s

புதுக்குப்பம் டேனிஷ் பள்ளியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம் சார்பில் நடந்த இப்போட்டியில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Advertisment

5 முதல் 12 வகுப்பு வரை உள்ள 250 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 40 மாணவ-மாணவிகளுக்கு, கல்வி அலுவலர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

tv
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe