Skip to main content

ஆண்ட்ராய்ட்டு போன் ஆபத்திலிருந்து மாணவர்களை காக்க சதுரங்க போட்டி! 

Published on 25/12/2018 | Edited on 25/12/2018
sa

 

இன்றைய இளம் சிறார்கள் ஆண்ட்ராய்டு செல்போன், தொலைக்காட்சி விளையாட்டுகள், தொடர்களில் மூழ்குவதால் மூளை மழுங்கடிப்பதுடன், இளம் வயதிலேயே  பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.   அவர்களின் சிந்தனைகளை வளப்படுத்தும் நோக்கில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது.

 

s

 

புதுக்குப்பம் டேனிஷ் பள்ளியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம் சார்பில் நடந்த இப்போட்டியில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட,  அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


 
5 முதல் 12 வகுப்பு வரை உள்ள 250 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  இதில்  வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 40 மாணவ-மாணவிகளுக்கு,  கல்வி அலுவலர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சினிமா படப்பிடிப்புகளுக்கான வழிமுறைகள் வெளியீடு!

Published on 23/08/2020 | Edited on 23/08/2020

 

coronavirus lockdown minister prakash javadekar announces relaxation film and tv

நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகளைத் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

 

அதில், "படப்பிடிப்பு தளங்களில் 6 அடி தனிமனித இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும். ஒப்பனை கலைஞர்கள், சிகையலங்காரக் கலைஞர்கள் அனைவரும் கட்டாயம் கவச உடை அணிந்து பணியாற்ற வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.

coronavirus lockdown minister prakash javadekar announces relaxation film and tv

படப்பிடிப்பு தளத்தில் கேமராவின் முன் நடித்துக்கொண்டிருப்பவர்களைத் தவிர மற்ற அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்கள், ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது. உடைகள், விக், ஒப்பனை பொருட்கள் பகிர்ந்து கொள்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்". இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கலைஞர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதே நோக்கம்; வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் உடனே சினிமா படப்பிடிப்புகளைத் தொடங்கலாம் என  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
 

Next Story

புழல் சிறையில் கைதிகள் அறையில் இருந்து 18 டிவி பெட்டிகள் பறிமுதல்

Published on 14/09/2018 | Edited on 14/09/2018
Jail



புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் இருந்து 18 தொலைக்காட்சி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
 

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 

கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது.

 

Luxury life


சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. செல்போன் மூலம் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. அதில், அறைக்குள் கட்டில் போடப்பட்டு அதில் சொகுசு மெத்தையும் விலை உயர்ந்த தலையணைகளும் போடப்பட்டு, உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு, வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டு உள்ளன.
 

டி-சர்ட், அரைக்கால் சட்டை ஆகியவற்றுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடி உல்லாசமாக சுற்றுலா பயணம் மேற்கொள்வது போல டிப்-டாப்பாக உடைகளை அணிந்து, விலை உயர்ந்த ஷூக்களையும் கைதிகள் அணிந்து சிறைக்குள் போஸ் கொடுத்துள்ளனர்.
 

இதேபோல அலுவலங்களுக்கு மதிய உணவு எடுத்துச் செல்ல பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் சிறைச் சாலைகளுக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 

அதில் விதவிதமான உணவு வகைகளும் உள்ளன. ஜெயிலுக்குள்ளேயே இந்த உணவு வகைகள் சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எலக்ட்ரிக் குக்கர்களும் படத்தில் உள்ளன.

 

Luxury life


இந்த நிலையில் சென்னை புழல் சிறையில் ஏ.டி.ஜி.பி. அசுதேஷ் சுக்லா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புழல் சிறையில் வெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன் எடுக்கப்பட்டவை. புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
 

கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகைப்படம் வெளியானதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் இருந்து 18 தொலைக்காட்சி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது 2 எப்.எம். ரேடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.