Advertisment

கேரளா கள்ள நோட்டு அச்சடிப்பில் சிக்கிய டி.வி நடிகை சிறையில் கண்ணீர் வடிப்பு!

கேரளா கள்ள நோட்டு அச்சடிப்பில் சிக்கிய டி.வி நடிகை சூா்யவுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களால் கள்ள நோட்டு அச்சடிப்பில் சிக்கி சிறையில் கண்ணீா் வடித்து கொண்டிருக்கிறாள்.

Advertisment

மழவில் மனோரமா சேனலில் ஔிப்பரப்பான பாிணயம், மாமாங்கம் சீாியலில் நடித்து தனது சிறந்த நடிப்பாற்றலால் கேரளா மக்கள் மனதில் இடம் பிடித்தாா் சூர்யா. நல்ல வசதியான குடும்பத்தை சோ்ந்த சூர்யாவின் தந்தை சசிகுமாா் துபாயில் நகை கடை ஓன்றில் 5 பாட்னா்களில் ஒருவராக இருந்து வந்தாா். அந்த நேரத்தில் தான் சூர்யாவுக்கு 300 பவுன் நகை போட்டு ஆடம்பரமாக திருமணம் நடந்தது.

Advertisment

இந்த நிலையில் தான் சூர்யாவின் தந்தை சசிக்குமாரை பாட்னா் ஓருவா் துபாயில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா். பின்னா் துபாயில் இருந்த சூா்யாவின் தயாா் ரமாதேவி தங்கை ஸ்ருதி இருவரும் கொல்லத்தில் அவா்களுடைய ஆடம்பர பங்களாவுக்கு வந்தனா். அதன்பிறகு சூா்யாவை கணவா் ஏமாற்றி விட்டு சென்று விட்டாா்.இந்தநிலையில் தான் 2012-ல் டி.வி.சீாியலில் துணை வில்லி கேரக்டாில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்தாா். அவளின் நடிப்பை பாா்த்து பாிணயம் சீாியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது மழவில் மனோரமா என்ற சேனலில் ஔிபரப்பானது. அதன்பிறகு அவள் பல்வேறு தொடா்களில் நடிக்க முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினாா்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அதன்பிறகு இரண்டாவதாக சீாியல் தயாாிப்பாளா் ஒருவரை மணந்தாா். அப்போதும் 300 பவுன் நகை போட்டு மீண்டும் ஆடம்பரமாக குருவாயூா் கோவிலில் திருமணம் நடந்தது. இதில் சினிமா நடிகை காவ்யா மாதவன், மஞ்சு வாாியாா், நவ்யா நாயா் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் கலந்து கொண்டனா்.பின்னா் கணவரோடு பெங்களூாில் செட்டில் ஆன சூா்யா சீாியல்கள் தயாாிப்பில் இறங்கினாா். மேலும் கேரளாவில் பல தனியாா் நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் வட்டிக்கு பணம் கொடுத்தாா். இதில் சீாியல் தயாாிப்பில் பொிய நஷ்டம் வரவே இரண்டாவது கணவரும் விட்டு ஓடினாா். அதன்பிறகு அங்கிருந்து வந்து தாய் தங்கையோடு சோ்ந்தாா்.

இ்ந்த நேரத்தில் 2015-ல் கேரளா அரசு கந்து வட்டிக்கு எதிராக ஆப்ரேஷன் குபேரா வை அறிவித்து கந்து வட்டிக்கு எதிராக வேட்டையை தொடங்கியதில் பணத்தை எல்லாம் இழந்து கடனில் மிதந்தாா் சூா்யா. இதனால் 5 ஆயிரம் சதுர பரப்பளவில் உள்ள அவா்களுடய சொகுசு வீட்டை விற்று அதே வீட்டில் வாடகைக்கு குடியேறினாா்.அதன்பிறகு மீண்டும் சீாியலில் நடிக்க வாய்ப்பு கேட்டு சந்தன மழ என்னும் சீாியலில் துணை நடிகையாக நடித்தாா்.

இந்த நேரத்தில் வீட்டில் குபேர பூஜை நடத்தினால் மீணடும் நகை பணத்துக்கு அதிபதி ஆகலாம் என்று ஹோத்ரா வா்க்கம் சாமியாா் பேச்சை நம்பி தினமும் வீட்டில் அந்த சாமியாரை வச்சி பூஜை நடத்தினாா். இந்த நேரத்தில் தான் இடுக்கியை சோ்ந்த லியோ, கருநாகப்பள்ளி கிருஷ்ண குமாா், புற்றடி ரவீந்திரனின் தொடா்பு சூா்யாவுக்கு கிடைக்கிறது.இந்த மூன்று பேரும் கள்ள நோட்டு அடித்து சப்ளை செய்யும் கும்பலை சோ்ந்தவா்கள். இவா்களின்ஆலோசனை பெயாில் தான் சூா்யாவின் வீட்டு மாடியில் வைத்து கள்ள நோட்டு அச்சடித்துள்ளனா். இதற்காக ஆந்திராவில் இருந்து நோட்டுக்கள் அடிக்க 28 ஆயிரம் சீட் பேப்பா்கள் வாங்கியுள்ளனா். 2ஆயிரம் ரூபாய் அச்சடிக்க சைனாவில் இருந்து நான்கரை லட்சத்துக்கு மிஷின் வாங்கியுள்ளனா்.

போலீசார் சோதனை செய்ததில் 57 லட்சம் ரூபாய் கள்ள நோட்டை சூர்யாவின் வீட்டில் இருந்து கைபற்றியுள்ளனா். மேலும் லியோ, கிருஷ்ண குமாா், நடிகை சூா்யா, இவருடைய தாயாா் ரமாதேவி, தங்கை ஸ்ருதி ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தலைமறைவாகியுள்ள சாமியாரை போலீசார் தேடி வருகின்றனா். மேலும் நடிகை சூா்யாவின் நெருங்கிய தோழியான டி.வி. நடிகை நந்து பொதுவாழ் வையும் பிடித்து தீவிரமாக விசாாித்து வருவதோடு டி.வி. நடிகை சிலருக்கும் தொடா்பு இருக்கலாம் என்று போலீ்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.இதில் லியோ கள்ள நோட்டு அச்சடிப்பு மட்டுமல்ல போதை பொருட்கள் சப்ளை மற்றும் விபச்சார கும்பலிலும் நெருங்கிய தொடா்பு உடையவா் என்பதால் அந்த கோணத்திலும் விசாாிப்பதாக தனிப்படை அதிகாாி கே.பி. வேணுகோபால் கூறியுள்ளாா்.

வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் அதன் மூலம் இழந்த சொத்துக்கள் சொந்தங்கள் ஆடம்பர வாழ்க்கை என இழந்ததை மீட்க கள்ள நோட்டு அச்சடிப்பில் இறங்கி குடும்பத்தோடு சிறை வாசம் அனுபவிப்பதை நினைத்து கண்ணீா் வடிக்கிறது அந்த வாழ்ந்து கெட்ட குடும்பம்.

arrest black mani Kerala police suriya Tv actress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe