
கடந்த 15ம் தேதியன்று தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் ரெடிமேட் ஃபேஷன் ஸ்டோர் ஒன்றை திறப்பதற்காக டிவி ஒன்றில் குக் வித் கோமாளி என்கிற ப்ரோகிராமிலிருக்கும் புகழ் என்பவர் வருகிறார் என நகரில் ஆட்டோ மூலமாகவும் போஸ்டர் மூலமாகவும் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
அன்றைய தினம் காலையில் திறப்பு விழாவிற்கு புகழ் வருவதையறிந்து கூட்டம் அந்தக் கடை முன்பாகத் திரண்டுவிட்டது. இதைக்கண்ட புகழ் சமூக இடைவெளி பின்பற்றாததையறிந்து ஃபேஷன் ஷோரூமைத் திறந்து வைத்து விட்டு வேகமாகக் கிளம்பிவிட்டார். இதனிடையே இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கண்காணித்த நகராட்சி அதிகாரிகள் சமூக இடைவெளி பின்பற்றாமலும் முன் அனுமதி பெறாமல் கூட்டம் சேர்ந்ததற்கு காரணமான கடை அதிபர் மீது அபராதம் தீட்டிவிட்டனர். இது நகரில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Follow Us