தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஆனந்தி(வயது 16), அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வகுப்பறையில் நேற்று செல்போன் பயன்படுத்தியதாக தெரிகிறது.

Advertisment

a

இதையடுத்து பள்ளி ஆசிரியை திட்டி உள்ளார். மேலும் இதுகுறித்து பெற்றோரிடமும் பள்ளி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஆனந்தி, வீட்டிற்கு வந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதுதொடர்பாக சங்கரலிங்கபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

தற்கொலை செய்து கொண்ட மாணவி சிலம்பம், வாள்வீச்சு போன்ற தற்காப்பு கலைகளை திறம்பட கற்றுத் தேர்ந்தவர். மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். அவரது மறைவு உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.