Skip to main content

‘காமராஜருக்கு இணையானவரா எடப்பாடி; வாயில் வருவதை எல்லாம் வாந்தி எடுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...’

Published on 07/05/2019 | Edited on 14/05/2019

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி,  "ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் தமிழர்கள் இந்தி கற்காமல் போனதும், மாணவர்களை திமுக இந்தி படிக்க விடாமல் தடுத்ததும் தான்" என பேசி இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 

 

ர

 

அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியின் "அக்னிப் பரிட்சை" நிகழ்ச்சியில் பேசும் போது கர்மவீரர் காமராஜருக்கு இணையானவராக எடப்பாடி பழனிச்சாமி  திகழ்வதாகவும் ராஜேந்திர பாலாஜி  பேசியுள்ளார். 

 

மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜகவை திருப்தி படுத்த வேண்டும் என்கிற நோக்கில் தமிழக பால்வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி  தொடர்ந்து "தனது வாயில் வருவதை எல்லாம் வாந்தி எடுப்பதை" தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டிக்கிறோம்.

 

அமைச்சர்களாக இருக்க தகுதியற்றவர்களை எல்லாம் அமைச்சர்களாக்கி அழகு பார்த்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  உயிரோடு இருந்த வரை அவர் பயணிக்கும் காரின் டயரை பார்த்தும், வான்வெளியில் பறக்கும் ஹெலிகாப்டரை பார்த்தும் கும்பிடு போட்டு வாழ்க்கை நடத்திய அமைச்சர் பெருமக்கள் தற்போது தங்களின் பொறுப்பையும் மீறி பேசுவது என்பதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.   எனவே மொழிப்போர் தியாகிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி  தனது கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

விஜயபிரபாகரனுக்கு சாலியர் மகாஜன சங்கம் ஆதரவு! - ராஜேந்திரபாலாஜி வீட்டில் நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Saliyar Mahajana Sangam support for Vijaya Prabhakaran

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சமுதாய ரீதியிலான வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சியினரும், போட்டியிடும்  வேட்பாளர்களும் முனைப்பு காட்டிவருகின்றனர். அதற்காக, சமுதாயப்  பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. குறிப்பாக, அருப்புக்கோட்டையிலும் சாத்தூரிலும் சாலியர்கள் அதிகமாக  வசிக்கின்றனர். இந்நிலையில், சாலியர் மகாஜன சங்கமும், நெசவாளர் முன்னேற்றக் கழகமும், இத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  

சாலியர் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவரான ஏ.கணேசன் தலைமையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்கல்லில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோது, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் உடனிருந்தார்.  தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது  குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தினார்கள்.