“அவிங்க வந்துட்டா அப்பறம் உங்கள சேர்க்கமாட்டங்க” - சாதிய ரீதியில் மாணவனிடம் ஆசிரியை  பேசும் ஆடியோ! 

Tuticorin Kolathur government school teacher audio

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, சாதிய ரீதியில்அப்பள்ளியில்12ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தஆடியோவில், “ உன் பேர் என்ன” என்ற துணைத் தலைமை ஆசிரியர் கேட்க, மாணவன் தனதுபெயரைக்குறிப்பிடுகிறார். அடுத்த கேள்வியாக அந்த மாணவனின் சமூகத்தைக் குறிப்பிட்டு மாணவனிடம் உறுதிபடுத்திக்கொள்கிறார். அதன் பிறகு அந்த மாணவனிடம், “நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்செய்வியா”எனகேட்கும்போது, “என்னடீச்சர்சொல்லுங்க..” என்கிறார் மாணவர். அதன்பிறகு, பள்ளியில் உள்ள வேற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களின்பெயரைகுறிப்பிட்டு, “அவர்களை உங்களுக்குபிடிக்குமா”எனகேட்கிறார். அதற்கு மாணவன், “எல்லாத்தையும் பிடிக்கும்” என்கிறார். மாணவனின்பதிலைக்கேட்டு ஒரு சில நொடிகள் யோசிக்கும் ஆசிரியை, “எல்லாத்தையும் பிடிக்கும்னு சொல்லும் நீ, எப்படி எனக்கு உதவி செய்ய முடியும். அந்த ஆசிரியர்களைஉங்கஅப்பாவுக்குபிடிக்குமா” என்று தொடர்ந்து பேசிவிட்டு, குறிப்பிட்ட அந்த ஆசிரியர்கள், “உங்கஊர்பயங்களசேர்க்கக் கூடாதுனு,அவங்கசொல்லுவாங்கஅதான் கேட்டேன்” என்கிறார்.

பிறகு அந்த ஆசிரியை தனது சமூக அடையாளத்தையும், பேசும் மாணவனின் சமூகத்தையும் குறிப்பிட்டுவிட்டு, அந்த இரண்டு ஆசிரியர்களின் சமூகம் என்னவென்று மாணவனிடம் கேட்க, அவர் ஆசிரியர்களின் சமூகத்தைக்குறித்துதெரிவிக்கிறார். அதன் பிறகு மாணவன், “எல்லோரும் சமம் தானேடீச்சர்” என்றதும், “இப்போபெற்றோர் கழகதலைவர் தேர்தல்வர போகுது. அதில்உங்கஊர்காரர்களிடம்சொல்லி யாரையாவது நிற்கசொல்லு.அவிங்கவந்துட்டாஅப்பறம்உங்கபயளுகளசேர்க்கமாட்டாங்க” என்று பேசுகிறார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆடியோகுறித்துச்சம்மந்தப்பட்ட மாணவனிடம் நாம் கேட்டபோது, “ஆம் நான் தான் அந்தஆடியோவில்பேசியிருப்பது. அது உண்மைதான்” என்றார்.

ஆசிரியைதொலைப்பேசிஎண்ணைத் தொடர்புகொண்ட போது தொடர்பு துண்டிக்கப்பட்டுஇருந்தது.

Tuticorin
இதையும் படியுங்கள்
Subscribe