Skip to main content

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு -தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு

Published on 24/03/2018 | Edited on 24/03/2018

 

Tuticorin


    
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டது. அதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆலை அமைந்துள்ள குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் முதல் பல கட்டங்களாக போராடி வருகின்றனர்.
 

இந்நிலையில் கடந்த 17-ந் தேதி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.
 

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று (24-ந் தேதி) தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.
 

இதையடுத்து இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்களும் ஓடவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மாலையில் விவிடி சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
 

சார்ந்த செய்திகள்