Female MLA who provided food issue

கரோனா பரவலை தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

கரோனா பரவலை தடுப்பதற்கு மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு, சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், அதிகளவில் கட்டணம் வசூலிப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Advertisment

இதனால், விவசாய பொருட்களை கொண்டு செல்லும்போது, கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலித்தால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதால், ஊரடங்கு முடியும் வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கக் கோரி, திருவண்ணாமலையை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தது.

Advertisment

அப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல், சுங்க கட்டணம் வசூலிக்க சட்டம் அனுமதிப்பதாகவும், சாலைகளை முறையாகபராமரிக்க வேண்டியது நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் கடமையாகும். மேலும், இதுசம்பந்தமாக மனுதாரர் கோரிக்கை மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

இதைபதிவு செய்த நீதிபதிகள், கோரிக்கை தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர். அந்த மனுவை விரைந்து பரிசீலித்து முடிவெடுக்க, நெடுஞ்சாலை துறை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.