ஈரோட்டில்அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படும் நிலையில்சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகியவிடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மாவட்டத்தில் 4 இடங்களில் உள்ள ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைக் கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்,ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைக் கூடம், என மஞ்சள் ஏலம் நடக்கும்.
இந்நிலையில்கடந்த 14 ஆம் தேதிமஞ்சள் ஒருகுவிண்டால்அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரத்து 500க்குவிற்பனையாகி 12ஆண்டுகளுக்குப் பிறகு மஞ்சள்குவிண்டால்புதியஉச்சத்தைத்தொட்டது. ஈரோடு மஞ்சளுக்குமவுசுஅதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம். இதனால் ஈரோடு மஞ்சளை வெளிமாநில வியாபாரிகள்போட்டிப் போட்டு வாங்கிச் செல்கின்றனர்.
நேற்று ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 2,049 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள்விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். இதில் விராலி மஞ்சள்குவிண்டால்ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.14,569க்கு விற்றது. ஒரு வாரத்தில் மட்டும் மஞ்சள்குவிண்டால்ரூ.4,399 வரை உயர்ந்துள்ளது. மஞ்சள் விலைகுவிண்டாலுக்குரூ. 15 ஆயிரத்தை நெருங்கியது விவசாயிகளுக்குமகிழ்ச்சியைக்கொடுத்துள்ளது.