/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_293.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள வடசெட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது சிறு வயது முதலே தனது கண்ணின் வலதுபுறத்தில் இருந்த கட்டியால் அவதி அடைந்து வந்துள்ளார். இந்த கட்டி கடந்த ஓராண்டிற்கு முன்னர் மிகப்பெரிய கட்டியாக மாறிய நிலையில் தனது குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த விதமான நிகழ்ச்சிகளிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் லட்சுமி தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். 63 வயதாகும் லட்சுமிக்கு வயது மூப்பின் காரணமாக இவருக்கு சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான வியாதிகள் வந்துள்ளது.
இந்த நிலையில் குடும்பத்தினர் வலியுறுத்தலின் பெயரில் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அந்த கட்டியை அகற்றுவது குறித்து கேட்டுள்ளார்கள். அந்த கட்டியை அகற்றினால் உங்கள் உடலுக்கே ஆபத்து ஏற்படும் என தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது கண் மருத்துவர் நேரு சோதனை செய்து இதற்கான சிகிச்சை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளார். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் மருத்துவர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் லட்சுமிக்கு பல்வேறு விதமான பரிசோதனைகளை செய்து தொடர்ந்து கடந்த ஜனவரி மாத இறுதியில் வெற்றிகரமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்தனர்.
அறுவை சிகிச்சை செய்து அவரது முகத்தில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. அத்தோடு இப்போது அவர் பாதுகாப்பான நல்ல நிலையில் இருப்பதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)