
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப்பிரிந்து கிடக்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு மாநாடு, போராட்டம் என அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தி குற்றவாளிகளுக்குத்தண்டனை பெற்றுத் தர வேண்டும் என ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் மாவட்டத்தலைநகரங்களில் போராட்டம் நடத்த தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையைத்தீவிரப்படுத்தக்கோரி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஓபிஎஸ் உடன் அமமுகவின் டி.டி.வி தினகரனும் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்து இந்த பிரச்சனையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முயன்றுள்ளனர்.
Follow Us