Advertisment

சாமியாரை ரகசியமாக சந்தித்த தினகரன்! - கிரிவலம் என திசை திருப்பம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவுமான டி.டி.வி.தினகரன், தலைமைையில்8 வழிச்சாலையை அமைக்கும் எடப்பாடி அரசாங்கத்தை கண்டித்து இன்று திருவண்ணாமலை அண்ணாசிலை எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக 5ந்தேதி இரவே திருவண்ணாமலை வந்த டிடிவி தினகரன், தனது நண்பரான முத்துக்கிருஷ்ணன் என்பவரது ஹோட்டலில் தங்கியுள்ளார். இரவு 10 மணியளவில் தனது நண்பர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் 4 பேருடன் காரில் கிளம்பிய அவர், கொஞ்ச தூரத்துக்கு பின் காரில் இருந்து இறங்கி நடக்க துவங்கினார்.

இதில், டிடிவி தினகரன் கிரிவலம் வருகிறார் என செய்திகளை கிளப்பிவிட்டனர். ஆனால், உண்மையில் அவர் கிரிவலம் வரவில்லை. கிரிவலப்பாதையில் அவர் வணங்கும் மூக்குப்பொடி சாமியார் திருநேர் அண்ணாமலை அருகே இருந்ததாக கேள்விப்பட்டு அவரை சந்திக்கவே சென்றுள்ளார். அவரை சந்தித்துவிட்டு கொஞ்ச தூரம் நடந்தவர் பின்னர் கார் ஏறி ஹோட்டலுக்கு வந்தார் என்கிறார்கள் அவருடன் உள்ளவர்கள்.

​ ஏற்கனவே மூக்குப்பொடி சாமியாரை சந்தித்து அவர் ஆசி பெற முயல, சாமியார் தினகரனை விரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த துரத்தல் அவருக்கு பல சரிவை தந்தது என்றார்கள் அவருடன் இருந்தவர்கள். இந்தமுறை ஆசி வழங்கினாரா? துரத்தினாரா என்பதே பலரின் கேள்வியாகவுள்ளது.

tiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe