செந்தில்பாலாஜியை நெருக்கும் டிடிவி தினகரன்! கை கொடுக்கும் மு.க. ஸ்டாலின்!

தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பிரச்சாரம் செய்யாத நேரத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை 6 மாதத்திற்கு முன்னதாகவே பிரச்சாரத்தை ஆரம்பித்தவர் டிடிவி தினகரன். மற்ற கட்சிகள் ஆரம்பிக்கும் போது 60 சதவீத தொகுதி பிரச்சாரத்தை முடித்திருந்தார்.

தனித்துச் செயல்படத் தொடங்கிய தினகரன் தொடர்ச்சியாக மாநாடுகள் நடத்துவதற்கு அதிகமாகச் செலவு செய்தவர் செந்தில்பாலாஜி. அதுவரை தினகரன் எந்தச் செலவு செய்யாமல் கூட இருப்பவர்களையே செலவு செய்ய வைத்தார். ஆனால் செந்தில்பாலாஜி தொடர்ச்சியாகசெலவு செய்தும், இங்கே இருந்து எந்த முன்னேற்றமும் இருக்காது என்று முடிவு பண்ணி தி.முக.வில் இணைந்து கடந்த 15 வருடங்களாகச் சோர்ந்து போயிருந்த திமுகவிற்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்து மாவட்ட பொறுப்பாளராக ஆகி தற்போது அரவக்குறிச்சி தேர்தலில் வேட்பாளராக இருக்கிறார்.

ttv dinakaran verses senthilpalaji... Election situation

செந்தில்பாலாஜி திமுகவிற்கு அணி மாறியது தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் இடையே பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவரை தினகரன் மீது நம்பிக்கையாக இருந்த பல பேர் தேர்தலுக்குப் பணம் எங்களால் செலவு செய்ய முடியாது என்று மறுப்பு காட்ட ஆரம்பித்தனர்.

இதன் பிறகு தான் வேறு வழியில்லாமல் டிடிவி.தினகரன் தனிப்பட்ட முறையில் கட்சி சார்பாக எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்குக் கட்சி நிதி ஒன்று குறிப்பிட்ட பணத்தைத் தாராளமாக இறைத்தார்.

தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் வேறு எந்தத் தொகுதிக்கும் இல்லாத அளவிற்குத் திமுக, அதிமுக இணையாவும் அதற்கு ஒரு படி மேலேயேயும் செலவு பண்ணியிருக்கிறார்கள். அரவக்குறிச்சிக்குத் தொடர்ச்சியாக 3 முறை இந்தத் தொகுதிக்குள் வலம் வந்து 100 இடங்களுக்கு மேல் பிரச்சாரம் செய்து தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற செந்திபாலாஜி ஜெயிக்கக் கூடாது என்று நெருக்கடி கொடுக்கிறார்.

ttv dinakaran verses senthilpalaji... Election situation

அமமுகச் சார்பில் வெளியூர்களில் இருந்து முன்னாள் அமைச்சர்கள். பழனியப்பன், அன்பழன், ரெங்கராஜன், மாவட்ட செயலாளர்கள் மனோகரன், சீனிவாசன், தங்கவேல், திண்டுக்கல் நல்லசாமி, தர்மபுரி டி.கே.ராஜேந்திரன், என் பெரிய பட்டாளத்தையே இறக்கி தொகுதியை கதிகலங்க வைத்துள்ளார்.

திருச்சியிலிருந்து வந்திருக்கும் மா.செ மனோகரன், சீனியவாசன் குரூப் கோவிலூர் பகுதியில் தனிப்பட்ட முறையில் சில்வர் தட்டு, குடங்கள் ஆகியவற்றை இலவசமாகக் கொடுத்து மக்களை வசியப்படுத்தும் வேலையிலும் இறங்கியிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக பள்ளப்பட்டி பகுதியில் முஸ்லீம்களிடம் 100 சதவீதம் பணம் கொடுத்துள்ளார்கள். வேட்பாளரும் முஸ்லீம் என்பதால் இங்கே உள்ள 60,000 வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்தி உள்ளார்கள். இப்படி செய்வதன் மூலம் திமுகவிற்கு செல்ல வேண்டிய வாக்குகள், பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்.

ttv dinakaran verses senthilpalaji... Election situation

செந்தில்பாலாஜிக்கு நெருக்கடியை தினகரன் கொடுக்கிறார் என்பதை அறிந்த அதைச் சமாளிக்கும் விதமாகத் திமுகத் தலைவர் ஸ்டாலின் முதல்முறையாக வந்த போது பள்ளப்பட்டியில் சுற்றி சுற்றி நகர்ந்து நடந்து பிரச்சாரம் செய்து அவர்கள் குறைகளை கேட்டறிந்தார் அதற்கு பெரிய ரெஸ்பான்ஸ் மக்களிடம் கிடைத்தது. அங்கிருந்து அதிமுக முக்கிய பொருப்பாளர்கள் பலர் ஸ்டாலின் வருகைக்கு பிறகு திமுக பக்கம் திரும்பினார்கள். தற்போது தினகரன் 3 முறை தொகுதி பக்கம் வந்து சென்றதால் இரண்டுடாவது முறையாக அரவக்குறிச்சிக்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவு நாளில் வருகிறார். இதன் மூலம் செந்தில் பாலாஜிக்கு கடைசி நேர நெருக்கடியை சமாளிக்க வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள்.

ammk senthilbalaji stalin
இதையும் படியுங்கள்
Subscribe