பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் படு தோல்வி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் டெபாசிட் கூட வாங்க வில்லை. இதனால் அதிருப்தி அடைந்த டிடிவி ஆதரவாளர்கள் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள்.

Advertisment

அதுபோல் தான் டிடிவி ஆதரவாளரான தங்க தமிழ் செல்வனின் தீவிர ஆதரவாளரான கூடலூர் முன்னாள் சேர்மன் அருண்குமார் திடீரென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி தாய் கழகமான அதிமுகவில் துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் தனது ஆதரவா ளர்களுடன் இணைந்தார்.

o

இந்த அருண்குமார் முதலில் தேமுதிகவில் மாவட்ட செயலாளராக இருந்தார். அதன் பின் தங்கதமிழ்செல்வன் தான் அதிமுகவில் சேர்த்து சீட் வாங்கி கொடுத்ததின் மூலம் கூடலூர் நகர் மன்ற தலைவராக இருந்தார். அதோடு தங்கதமிழ் செல்வனின் தீவிர ஆதரவாளராக இருந்த அருண்குமார் திடீரென அதிமுகவுக்கு தாவியதை கண்டு மாவட்டத்தில் உள்ள டிடிவி ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் மூழ்கி விட்டனர்.

Advertisment

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தங்க தமிழ்செல்வன் டெபாசிட் கூட வாங்க வில்லை. அந்த அளவுக்கு மாவட்டத்தில் தங்க தமிழ் செல்வனுக்கு செல்வாக்கு இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் டிடிவி ஆதரவாளர்களை இழுக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள்.