18 எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேரையும் குற்றாலத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளார் என்றும், அதற்கான ஏற்பாடுகளை வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோரும் இந்த ரிசார்ட்டில் தங்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக விசாரிக்கும்போது, குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட்டில்தான் இந்த எம்எல்ஏக்கள் தங்க உள்ளதாகவும், ரிசார்ட்டில் உள்ள அனைத்து அறைகளும் புக் செய்யப்பட்டள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.