/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TTV_0.jpg)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் மனோகரனின் தாயார் நேற்று மறைந்தார். இன்று, அவருக்குஅஞ்சலி செலுத்தி அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தன்னை பரதன் என்று சொல்லிக்கொள்ளும்துணை முதலமைச்சர் ஓபிஎஸ்,பரதனாகவே அமைதி காத்திருந்தால், மீண்டும் அவர் பிப்ரவரியில் பரதனாகி இருப்பார். ஆனால், அவர் இராவணனோடு சேர்ந்துவிட்டார். அது அவருக்கும் நல்லதல்ல நாட்டிற்கும் நல்லதல்ல. அமைச்சர்களின் விமர்சனம் குறித்து கேட்டதற்கு, நாங்கள் எப்போதும் யாரையும் விமர்சிக்கத் தேவை இல்லை.எங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டும்தான் நாங்கள் மற்றவரைப் பற்றி விமர்சிப்போம்.எனவே, இங்கு அமைச்சர்கள் கூறும் எந்த விமர்சனத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் இல்லை.
எங்களுடைய ஒரே இலக்கு, மீண்டும் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்து அதிமுகவை மீட்டெடுப்பது மட்டும்தான்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று அதிமுகவை கைப்பற்றும். ஒருவேளை திமுக தப்பித்தவறி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால் எங்களுடைய மடியில் கனமில்லை. ஆனால், அவர்கள் நிலைமையைச்சற்று யோசித்துப் பாருங்கள்.
ஸ்லீப்பர் செல் குறித்த கேள்விக்கு, ஸ்லீப்பர் செல்கள்என்று சொல்லக்கூடியவர்கள் எம்எல்ஏவோ, அமைச்சர்களோ அல்ல. அடிப்படையில் அவர்கள் சாதாரணத் தொண்டர்கள். எங்களுடைய ஸ்லீப்பர் செல்களை சின்னம்மாவருகையின்போதுபார்த்திருப்பீர்கள். இவ்வாறு பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)