Advertisment

 அம்மாவுக்கு என்னாச்சு? அமமுகவினரை தெறிக்கவிட்ட குடும்ப பெண்கள்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் அமமுக வேட்பாளர் ஆனந்துக்கு புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் அமமுக நிர்வாகிகள் அய்யப்பன், செல்வம், ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ குமார் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

அப்போது ஒரு வீட்டிற்குச் சென்ற போது அவர்களை அடித்து விரட்டாத குறையாக இரு பெண்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டே ஓடவிட்டனர். அதை வீடியோவாகவும் எடுத்து அது வைரலாக பரப்பியுள்ளனர்.

a

அந்த வீடியோ உரையாடல்..அம்மா பரிசுப் பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கம்மா..

யாரு வேட்பாளர்? எதுக்கு அவருக்கு ஓட்டுப்போடனும்? தினகரனோட ஆளு. புதுசா வருறார்.

Advertisment

புதுசா எதுக்கு வரனும்?நல்லது செய்ய தான்.சரி நான் ஒன்னு கேட்கிறேன்.. ஜெ அம்மா தான்., சசிகலா தினகரனை தான் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொன்னாங்களா இல்லையா?

அது பழசும்மா என்று ஒருவர் சொல்ல மற்றொருவர் அவங்க என்ன கெடுதல் பண்ணியிருக்காங்க என்க..செப்டம்பர் 22 ந் தேதி என்ன நடந்துச்சு? அம்மாவுக்கு என்னாச்சு அதை முதல்ல சொல்லுங்க?ஏன் ஓபி எஸ் தானே சி.எம்மா இருந்தாரு..

அவரு தெரியாதுன்னு சொல்லிட்டாரு.. சசிகலா மேடம் கட இருந்தாங்க.. ஆஸ்பிடல்ல என்ன நடந்துச்சு? என்ன முடிவெடுத்தாங்க?

விசாரனை கமிசன்ல இருக்கு..விசாரனை கமிசன் இருக்கட்டும். பொது ஜனமா கேட்கிறோம் சொல்லுங்க?நீங்களும் நானும் பேசுறது கமிசன்ல தீர்ப்பாகாது.

சரி பிரசிடென்ட் எலக்சன்ல மோடிக்கு ஆதரவுன்னு ஏன் சொன்னீங்க?

மோடிக்கு ஆதரவுன்னு சொல்லவே இல்ல..நாட்டை கெடுக்கனும்னா மோடிக்கே போடுங்கம்மா என்று சொல்லிவிட்டு அமமுக வுக்கு ஓட்டுக் கேட்டு வந்த மொத்த பேரும் ஓடினார்கள்.

பரிசுப் பெட்டிக்கு ஓட்டுக் கேட்டு வந்தவர்களை கேள்வி கேட்டு தெறிக்கவிட்ட பெண்களின் வீடியோ தான் இப்ப பரபரப்பாக போகிறது.

Jayalalithaa modi
இதையும் படியுங்கள்
Subscribe