/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops-eps-ttv_0.jpg)
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அழைப்பு விடுத்துள்ளனர்.
தகுதி நீக்க வழக்கில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. 18 எம்.எல்.ஏக்களின் தகுநீக்கம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து மேல்முறையீட்டுக்கு செல்வதா? தேர்தலை சந்திப்பதா? என்று குழப்பத்தில் உள்ளார் தினகரன். இந்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து இந்த அழப்பை விடுத்துள்ளனர்.
அந்த அழைப்பில் மேலும், நீர் அடித்து நீர் விலகுவதில்லை. தவறான வழிநடத்தல்கள் காரணமாகவும், சிறு சிறு மனக்கசப்புகள் காரணமாகவும் மாற்றுப்பாதையில் சென்றவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு மீண்டும் இணைய வேண்டும். சிறு அதிமுக சிறு மனமாச்சரியங்கள், எண்ண வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு உழைக்கும் இயக்கம். இப்பேரியக்கம் புதிய புறநானூறு படைக்கும் ஆற்றல் கொண்ட இயக்கம். ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் இயக்கமாக விஸ்வரூபம் எடுத்து அரசியல் எதிரிகளை வீழ்த்தும்.
அதிமுக ஆயிரம் காலத்து பயிர். தமிழர்களூக்கு நிம்மதி எனும் நிழல் தரும் ஆலமரம். ஒருதாய் வயிற்றுப்பிள்ளையாக அன்பும், பாசமும் கொண்டு சகோதர உணர்வுடன் மக்கள் பணியாற்றி வருகிறோம் என்று தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள அழைப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)