kamaraj

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கனமழை காரணமாக நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் எண்ணிக்கை ஒருலட்சத்து 12 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்துள்ளதுஎன திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டியளித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராஜேந்திரபாலாஜி , வீரமணி ,காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்காமராஜ் தெரிவித்ததாவது.

"திருவாருர் மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது . இதுவரை 548 கால்நடைகள் இறந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்துகணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

டிடிவி.தினகரன் பொதுமக்களிடம் நல்ல செய்திகளைக் கூறுவதே இல்லை. அரசியல்ஆதாயத்திற்காக ஏதாவது பேசிக் கொண்டு வருகிறார். அவருக்கு அரசியல் ஆதாயம்கிடைக்கப் போவதில்லை". என கூறினார்.