ADVERTISEMENT

குக்கர் சின்னம் மறுப்பு... டிடிவி தினகரன் கருத்து...

02:24 PM Jan 24, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதால் டிடிவி தினகரன் குக்கர்சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திந்தார். அந்த வழக்கில் பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும் அதேபோல் அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சியும் அல்ல என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும் தேர்தல் ஆணையத்தில் உள்ள பொதுவான சின்னத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே ஒதுக்க முடியும் என்றும், அதனை தனிப்பட்ட கட்சி உரிமைகோர முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று பெங்களூருவில் சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது குக்கர் சின்னம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தேர்தல் ஆணையம் அதன் நடைமுறையை சொல்லியிருக்கிறது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கிறது. ஏற்கனவே நீதிமன்றம்தான் இதற்கு தடை விதித்தது என்பதால் மீண்டும் சின்னத்தை வழங்கச் சொல்லி நீதிமன்றமே உத்தரவிடுமென நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT