Skip to main content

"சசிகலா உடல்நிலை சீராக உள்ளது" - டி.டி.வி.தினகரன் பேட்டி...

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

TTV DHINAKARAN MLA PRESS MEET AT BENGALURU GOVT HOSPITAL

 

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா, வரும் ஜனவரி 27- ஆம் தேதி பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதன் காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

தினசரி செய்யப்படும் உடல் பரிசோதனைபோல் நேற்று (20.01.2021) பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது உடல் வெப்பநிலை சற்று அதிகமாகவும், காய்ச்சல் மற்றும் சிறிய அளவிலான மூச்சுத்திணறல் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது. நேற்று பிற்பகல் 02.00 மணிக்கு சிறையில் இருந்த சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மருத்துவர்கள் சிறைக்கு வந்து சசிகலாவிற்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளித்தனர். அதன் பிறகு நேரடியாக அதிகபட்ச சிகிச்சை தேவை என்பதால் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவாஜி நகர், பைரிங் ஹாஸ்பிட்டல் என்று சொல்லப்படுகிற அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

 

உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் ராபிட் (RAPID) முறையில் கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் ஆர்.டி-பிசிஆர் (RT-PCR) முறையில் எடுக்கப்பட்ட சோதனையிலும் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

முதலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் சற்று கட்டுக்குள் வந்ததால், சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார். பின் மீண்டும் முச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக நள்ளிரவு 01.00 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சசிகலா சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் வந்துள்ளனர். இதனிடையே மருத்துவமனைக்கு வருகை தந்த டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா நலமாக இருப்பதாகவும், அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆக்சிஜன் உதவியுடன் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிடி ஸ்கேன் தேவையா என்பதை மருத்துவர்களே முடிவு செய்வர். சசிகலாவை சந்திப்பதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.