யானை பலத்தில் அமமுகவினர் உள்ளனர் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் பேட்டியளித்துள்ளார்.

ttv dhinakaran

Advertisment

Advertisment

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பகுதியிலுள்ள சுவாமிமலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பேட்டியளித்தார். அப்போது அமமுக தொண்டர்கள் யானை பலத்தில் உள்ளனர். அடுத்த தேர்தலில் வென்று எங்கள் பலத்தை காட்டுவோம் என்றார்.

மேலும் பேசியவர், மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்றவற்றை நிலத்திலிருந்து எடுக்காமல் கடலில் இருந்து எடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவோம் என்றும் இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று தேர்தல் சமயத்தில் பேட்டி அளித்திருந்தார் தினகரன். ஆனால், தினகரனின் பேச்சு வெறும் பேச்சாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.