அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் விலகி திமுகவில் இணைந்துள்ளனர். மேலும் சிலர் கட்சியைவிட்டு விலக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ttv dhinakaran

Advertisment

Advertisment

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் இல்ல திருமண விழாவில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில்,

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து சிலர் பிரிந்து சென்று வேறு கட்சிக்கு சென்று உள்ளனர். கட்சியை விட்டு சென்ற அவர்கள் செய்த தவறை உணரும் நேரம் விரைவில் வரும். அ.ம.மு.க.வில் உள்ளவர்களுக்கு வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் உள்ளது.

முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான பழனியப்பன் கட்சியின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். இன்று திருமணம் காணும் மணமக்கள் என்.ஏ.விஜய்ஆனந்த்- எம்.பி.யாழினி வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும்” என்று கூறியுள்ளார்.