இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய்வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

Advertisment

கடந்த 27 ஆம்தேதி புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சி செயல்பாட்டுக்கு கொண்டுவரும்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி மேடையில் உரையாற்றும்போது, போன வருடம் புயல் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டாலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் நல்ல மழை பொழிந்து செழிப்பாக உள்ளது தமிழகம். எனவே பொங்கலுக்கு ஏதெனும் பரிசு அறிவிப்புஇல்லையா என செல்லும் இடங்களில் மக்கள் கேட்கிறார்கள்.

ttv dhinakaran

இந்த மேடையில் சொல்லுகிறேன், போன வருடம் போன்றே இந்த வருடமும் பொங்கலுக்குஒரு கிலோ பச்சை அரிசி, முந்திரி, திராட்சை, கரும்புஆகிய பொங்கல் தொகுப்புடன் அரிசி ரேஷன் அட்டைக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என கூறியிருந்தார். அதனையடுத்து இன்று பொங்கல் பரிசு திட்டத்தை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில்எடப்பாடி தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலார் டிடிவி.தினகரன் ஜனவரியில் வரும் பொங்கலுக்கு இப்பொழுதே பரிசு வழங்குவது கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறியுள்ளார்.