ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமமுக ஆலோசனைக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நேற்றுநடைபெற்றது. முக்கிய அமமுக முக்கியநிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்கலந்துக்கொண்டனர்.

இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியபோது,

ttv dhinakaran

Advertisment

Advertisment

அர்ஜூனர், கிருஷ்ணர் குறித்து பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால் சிலர் பேசுவதால் அது குறித்துபேசுகிறேன். மகாபாரதத்தில் பல சூழ்ச்சிகள் உள்ளன,கடந்த கால தோல்விகளை பற்றி நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் வெற்றி பெறுவோம்.நானும் உங்களை போன்று ஒரு தொண்டன்தான்.தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் தேர்தலை விரும்பவில்லை. ஆட்சி அதிகாரம் காரணமாகவே இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

அமமுக நிர்வாகிகளுக்கு அதிமுக சார்பில் விலை பேசப்படுகிறது.அமமுகவில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.நாடாளுமன்ற தேர்தலை போல உள்ளாட்சி தேர்தலில் ஏமாற மாட்டோம். யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என எனக்கு தெரியும். சரியான நேரத்தில் பதவி வழங்கப்படும். ஒற்றுமையாக இருந்தால்தான் வருங்காலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும். தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற போகிற இயக்கம் அமமுக என்றார்.