/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttv byte_0.jpg)
தமிழகத்தில் ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் வெற்றிக்கு பின், புதிய கட்சியை தொடங்க உள்ளேன் என்று கூறிய தினகரன், டெல்லி நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். தனது கட்சிக்காக மூன்று பெயரை அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார். இதன் மீது நடந்த விசாரணையில், நீதிபதி ரேகா, குக்கர் சின்னமும், பெயரையும் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, வருகிற மார்ச் 15ந்தேதி மதுரை மேலூரில் நடைபெற உள்ள விழாவில் டிடிவி தினகரன் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்து, கட்சி கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow Us