சுனாமி நினைவு தினம்- பொதுமக்கள், மீனவர்கள் அஞ்சலி!

tsunami tributes tamilnadu peoples, fisherman's

சுனாமி தாக்கியதின் 16- வது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மீன்பிடி இறங்கு தளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும், கடலில் பாலை ஊற்றியும் பொதுமக்கள், மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆறுக்காட்டுத்துறையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மக்களவை உறுப்பினர் செல்வராஜ் எம்.பி., உள்ளிட்டோர் கடலில் பாலை ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும், அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், செருதூர் உள்ளிட்ட நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Tamilnadu tribute tsunami
இதையும் படியுங்கள்
Subscribe