ADVERTISEMENT

சிதம்பரம் அருகே சுனாமி நினைவேந்தல்!

08:38 PM Dec 26, 2018 | kalidoss

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுனாமியில் உயிர் நீர்த்தவர்களின் நினைவு தினமான இன்று கிள்ளை பிச்சாவரம் உப்பனாற்றில் பால் ஊற்றி மலர் துாவி மீனவர்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுனாமி பேரலையில் கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட மீனவ கிராமங்கள், டி.எஸ்.பேட்டையைச் சேர்ந்த குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என 168 பேர் உயிரிழந்தனர்.

ஆண்டு தோறும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று சின்னவாய்க்கால்,

பில்லுமேடு, பட்டரையடி பகுதியில் உயிழந்தவர்கள் புகைப்படம், நினைவு துாண்களுக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பெண்கள் கதறி அழுதனர்.

பின்னர் அமைதி ஊர்வலமாக சென்று பிச்சாவரம் உப்பனாற்றில் பால் ஊற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். 300 க்கும் மேற்பட்டவர்கள் உப்பனாற்றில் பால் ஊற்றியும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி துக்கத்தை வெளிபடுத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT