Trying to steal the chain by pretending to ask for a house on rent

ஈரோடு மூலப்பாளையம் எல்.ஐ.சி நகரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி நான்சி டயானா. இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், விஜய்யின் தாயார் மேரி ஸ்டெல்லா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

Advertisment

இவர்களது வீட்டின் மேல் பகுதி காலியாக இருப்பதால் வாடகைக்கு விடுவதாக வீட்டின் முன்பாக 'டூலெட்' போர்டு வைத்திருந்தனர். இதனை பார்வையிட்ட ஒரு பெண் வாடகைக்கு வீடு கேட்பதுபோல ஸ்டெல்லாவிடம் பேச்சு கொடுத்துள்ளார் அப்போது அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததைக் கண்ட அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை மேரி ஸ்டெல்லா முகத்தில் வீசிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

Advertisment

அப்போது ஸ்டெல்லா கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்ததால் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர் . பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் அந்த பெண்ணை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணையில் ஈரோடு பாரதி நகரைச் சேர்ந்த பேபி (38) என்பதும் தெரியவந்தது. முன்னதாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப் பகலில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து பெண் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisment