Trying to sell elephant ivory, nine people including BJP youth district secretary

வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் ஒரு கும்பல் சட்ட விரோதமாக யானையின் தந்தத்தை விற்க முயற்சி செய்வதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் சம்பத் என்பவரின் வீட்டில் 4 தூண்டாக வெட்டப்பட்ட ஒரு யானை தந்தம், யானை பல் ஆகியவற்றை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்து. வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி செயலாளர் சரத்குமார், பிரபு, சம்பத் உட்பட ஐந்து பேர் மற்றும் இவர்களோடு தொடர்புடையதாக நான்கு பேர் என மொத்தம் ஒன்பது பேரைப் பிடித்து வேலூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவர்களிடம் இருந்து நான்கு துண்டு யானை தந்தம் மற்றும் அதனின் பல் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். யானை தந்தம் கடத்தல் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.