Skip to main content

’’முயற்சி பண்றேன்!’’ - கமல் அழைப்புக்கு ரஜினி பதில்

Published on 14/05/2018 | Edited on 15/05/2018
rajini kamal

 

 


காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க ரஜினிக்கு தொலைபேசியில் கமல் அழைப்பு விடுத்துள்ளார்.  அதற்கு, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முயற்சிப்பதாக கமல்ஹாசனிடம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்பில்,  “ காவிரிக்கான தமிழகத்தின் குரல்” என்கிற தலைப்பில் ஆலோசனைக்கூட்டம் மே மாதம் 19 ம் தேதி காலை 10.00 மணி அளவில் சென்னை மெட்ரோ மேனர் ஓட்டல்,97, சிடன்ஹேம்ஸ் சாலை, நேரு அரங்கம், நுழைவாயில் எண் 4 ,எதிர்புறம்,பெரியமேடு சென்னை- 600003 என்கின்ற முகவரியில் நடைபெறுகிறது .

 

அனைத்து விவசாய சங்கங்கள்,அமைப்புகள்,அனைத்துக் கட்சிகள்,நீர் மேலாண்மை வல்லுநர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இந்நிலையில், புதிதாக கட்சி தொடங்கவுள்ள ரஜினிக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்