Advertisment

“அது உண்மைதான்; எல்லோரும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்” - அமைச்சர் சக்கரபாணி பேட்டி 

'Truth is what everyone expects'- Minister Chakrapani interviewed

திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை நேற்று தமிழகம் முழுவதும் உள்ள திமுக கட்சிக்காரர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

Advertisment

இந்நிலையில்தமிழக உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ‘உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக ஆக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறதே உண்மையா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்குப் பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, ''உண்மைதான் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்க்கிறோம். தக்க சமயத்தில் தமிழக முதல்வர் இதுகுறித்து முடிவு எடுப்பார். உதயநிதி ஸ்டாலின் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்;இளைஞரணி செயலாளராக இருக்கிறார். அமைச்சராகவும் வந்தார் என்றால் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இயக்கத்தோழர்களுக்கும் சரி, கழகம் முன்னோடிகளுக்கும் சரி, தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்ல காரியங்களைச் செய்வார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Sakkarapani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe