
முன்னாள் தமிழக பாஜக தலைவரும்தற்போதையமத்திய இணை அமைச்சருமான எல்.முருகனுக்கு 'மக்கள் ஆசிர்வாதம் யாத்திரை' என்ற யாத்திரையைதமிழக பாஜக ஆரம்பித்திருக்கிறது. நேற்றுகோவையில்மக்கள் ஆசிர்வாதம் யாத்திரை தொடங்கிய நிலையில், இன்று திருப்பூரில் மக்கள் ஆசிர்வாதம் யாத்திரையின்இரண்டாம் நாள் பயணம் தொடங்கியது. திருப்பூரில் உள்ள சுந்தந்திரப் போராட்டத் தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மாலை அணிவித்து யாத்திரையைத் தொடங்கினார் எல்.முருகன். தாராபுரம், காங்கேயம், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு யாத்திரை செல்ல இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் எல் .முருகன் பங்கேற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''திமுகவினர் பொய்யான சமூக நீதியைப் பரப்புகின்றனர். உண்மையான சமூக நீதியை பாஜகவில் பார்க்கலாம்'' எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)