Advertisment

உண்மையான அதிமுக தொண்டர்கள் எனக்குத்தான் வாக்களித்துள்ளனர்- திருநாவுக்கரசர் பேட்டி

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி பிரிக்கப்பட்டுவிட்டதால் 6 சட்டமன்றத் தொகுதிகளும் 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் சிதறிக் கிடக்கிறது. இந்த 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என்ற ஆதங்கம் உடன்பிறப்புகளுக்கு தொடக்கத்தில் இருந்தது. அதே போல ஒரு தொகுதியில் மட்டும் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியிட்டார். அ.தி.மு.க தரப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொறுப்பை அமைச்சர் விஜயபாஸ்கர் எடுத்துக் கொண்டு களப்பணி செய்தார். அதிலும் ஒ.பி.எஸ். அணியை சேர்ந்தவர்கள் என்று மாஜிக்களாக கார்த்திக் தொண்டைமான் மற்றும் ராஜசேகர் குரூப்பை ஒதுக்கிவிட்டதால் அவர்கள் சொந்த மாவட்டத்தில் தேர்தல் பணி செய்யாமல் தேனி தொகுதியில் களப்பணி செய்தனர். தேர்தல் முடிவு வந்த நிலையில் அமைச்சர் கையில் எடுத்துக் கொண்ட தொகுதிகள் தோல்வி அடைந்த்து. ஆனால் நாங்கள் களப்பணி செய்த தேனியில் வெற்றி பெற்றோம் என்று அமைச்சர் தரப்பால் ஒதுக்கப்பட்ட ஒ.பி.எஸ். அணியினர் மகிழ்ந்தனர்.

Advertisment

 The true AIADMK volunteers have voted for me - Thirunavukarasar

இந்தநிலையில் தான் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.59 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டைக்கு வந்தார். அவருக்கு புதுக்கோட்டை நகர எல்லையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மாலை, பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினார்கள். இதுவரை யாருமே மன்னர் சிலைக்கு மாலை அணிவித்தது இல்லை. அவர் பிறந்த நாளில் மட்டும் மன்னர் குடும்பத்தினர் மாலை அணிவிப்பார்கள் மற்ற அரசியல் கட்சிகள் மாலை அணிவித்ததில்லையே என்று கூட இருந்தவர்கள் சொன்ன போது.. நம் வெற்றிக்கு மன்னரும் காரணம். அதனால் தான் முதல் மரியாதை மன்னருக்கு என்று சொல்லி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Advertisment

 The true AIADMK volunteers have voted for me - Thirunavukarasar

தொடர்ந்து பழைய பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர், அம்பேக்கர் சிலை, சத்தியமூர்த்தி சிலை, அண்ணாசிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது,

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை அ.தி.மு.க.வினர் மட்டும் தான் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இந்த முறை நான் 4.59 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன். அ.தி.மு.க வின் வாக்கு வங்கியாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கூட இந்த முறை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கை சின்னத்திற்கு கிடைத்து உள்ளது. அதேபோல புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள். நடுநிலையாளர்களும் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

 The true AIADMK volunteers have voted for me - Thirunavukarasar

மேலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவிர அ.தி.மு.க.வில் உள்ளவர்களும் எனக்கு வேண்டிய, எனக்கு பழக்கமான, என் நீண்ட நாள் நண்பர்கள் என பலர் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினரும் எனக்கு வாக்களித்துதான் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து இருந்தாலும் இங்கு உள்ளவர்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் எனக்கு வெற்றி வாய்ப்பு சரியாக இருந்தது.

3 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், கர்நாடக, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பெற்று உள்ளது. இந்த நிலையில் பிற மாநிலங்களில் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என காங்கிரஸ் கட்சி ஆராயும். எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கும் வெற்றி உரிய முறையில் உள்ளதா?. மீண்டும் வாக்குச்சீட்டு முறை சரியாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை என்றாலும் வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை போராடி வாதாடி மக்களுக்கு பெற்றுதருவேன் என்றார்.

admk congress thirunavukkarasar thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe