Advertisment

வாடகையை கேட்டதால் கத்தி குத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஆடுகள், மாடுகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். வெங்கடேசன் அதே ஊரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் 'டாட்டா ஏசி'யை வாடகைக்கு எடுத்து மாடுகளை ஏற்றிச் சென்றுள்ளார். கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாடகை பணம் ரூபாய் 800 தர வேண்டும் என்று கேட்டுள்ளார் சிலம்பரசன்.

Advertisment

rupees

அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த வெங்கடேசன் கத்தியால் சிலம்பரசனை விலா எலும்பு பகுதியில் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சிலம்பரசன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். இந்த கத்தி குத்து தொடர்பாக திருநாவலூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

driver problem Trucks
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe